வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
முதல் சந்திப்பில் ஆண்களிடம் பெண்கள் பார்க்க நினைக்கும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
இன்றைய சமூகத்தில் காதல் எந்த வகையில் வருகிறது என்று யாராலும் கணிக்க முடியாத புதிராகவே உள்ளது. யாருக்கு எப்போது வேண்டுமானாலும் காதல் வரும் சூழ்நிலைகள் இங்கே நிறைய இருக்கின்றன.
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் பார்த்து பழகிய பின்பு காதல் வருவது ஒரு முறை. அதே இடங்களில் பார்த்த முதல் நாளே காதல் மலரும் சம்பவங்களும் நிறைய அரங்கேறுகின்றன.
இதையெல்லாம் விட இன்றைய சமூகத்தில் நேரில் பார்க்காமலே, சமூக வலைத்தளங்களின் மூலமும், தொலைபேசிகள் மூலமும் உருவாகும் காதல் அதிகரித்து வருகின்றன. அவ்வாறு உருவாகும் காதலுக்கு ஒருவரையொருவர் முதலில் சந்திக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
தொலைபேசியில் இனிமையாக பேச தெரிந்த பலருக்கு தன் காதலியை முதல்முதலாக சந்திக்கும் போது எப்படி நடந்துகொள்வது என்று தெரிவதில்லை. முதல் சந்திப்பில் பெண்கள் ஆண்களிடம் என்னவெல்லாம் கவனிப்பார்கள் என்று கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்வது ஆண்களுக்கு நல்லது.
முதல் சந்திப்பில் மனதை கவர்வது தான் காலத்திற்கும் நீடிக்கும். முதல் சந்திப்பில் நீங்கள் நல்லவராக தெரிந்தால், கடைசி வரை நீங்கள் நல்லவராக அறியப்படுவீர்கள். தவறாக தெரிந்தால், கடைசி வரை உங்களை தவறாகவே எண்ணுவார்கள்.
உங்களது காதலியை சந்திக்க நீங்கள் முதல் முறையாக, எப்படி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர் முடிவு செய்வார்.
பெண்கள் அனைத்தையும் நன்றாக, கவனமாக பார்க்க கூடியவர்கள்.
முதலில் உங்கள் ஆடையை தான் பார்ப்பார்கள். எனவே பெண்களுக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.
உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
உடல் அசைவு பெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கண்கள் : பெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.
நம்பிக்கை : நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.