மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணை காதலித்து கடத்தி வந்த இளைஞர் போலீசில் சிக்கிய பரபரப்பு சம்பவம்
பெங்களூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனக்கு குழந்தை இருப்பதை மறைத்து இளைஞர் ஒருவரை காதலித்து சென்னைக்கு ஓடி வந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் இளைஞர் மற்றும் இளைஞரின் நண்பர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியை சேர்ந்தவர் முகமது பிலால் என்ற 21 வயது இளைஞர் பெங்களூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பெங்களூர் சிவாஜி நகரில் வசிக்கும் ஜெயபாத் தலாசும்(19) என்ற பெண் அடிக்கடி துணி எடுக்க அந்த இளைஞர் வேலை பார்க்கும் கடைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி போனில் பேசி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களின் காதல் தீவிரமாகவே அந்த பெண்ணின் வீட்டில் எப்படியும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என கூறி சென்னைக்கு ஓடி விடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து சீக்கிரமாகவே சென்னைக்கு சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என அந்தப் பெண் பிலாலிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இருவரும் சென்னை கோயம்பேடு வந்துள்ளனர். அங்கு தயாராக இருந்த பிலாலின் நண்பன் வவுசானின் உதவியுடன் தலாசின் நகைகளை அடகு வைத்துள்ளனர். பின்னர் அரும்பாக்கத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கி விடலாம் என முடிவு செய்துள்ளனர். எனவே தற்காலிகமாக அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் பெங்களூரில் பெண்ணின் வீட்டார் தங்கள் பெண்ணை பிலால் கடத்தி சென்றுவிட்டதாக கர்நாடகா சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெண் கடத்தல் வழக்கு அடிப்படையில் பிலால் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த போலீஸார் பிலாலின் செல்போன் சிக்னல் மூலம் அரும்பாக்கத்தில் இருப்பதை அறிந்து அரும்பாக்கம் போலீஸார் உதவியுடன் காதலர்களை பிடித்தனர்.
இதனிடையே பெண் வீட்டார் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். பிலாலை அவர்கள் தாக்க, பிலால் ஏன் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துக்கொண்டால் என்ன தப்பு என்று கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார் காதலித்து கல்யாணம் செய்வது தப்பில்லை, ஆனால் அடுத்தவர் மனைவியை காதலித்து கல்யாணம் செய்வது சரியா? எனக்கேட்டு தாக்கியுள்ளனர்.
என் காதலிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று அதிர்ச்சியில் காதலியை பார்க்க அவர் தலைக்குனிய, கல்யாணம் மட்டுமல்ல குழந்தையும் உள்ளது என்று பெண் வீட்டார் கூறியுள்ளனர். திருமணமானதையும், குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து ஏமாற்றி சென்னை அழைத்து வந்தது பிலாலுக்கு அப்போது தான் தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து பிலால் மற்றும் அவரது காதலுக்கு உதவிய நண்பர் வவுசான் ஆகிய இருவரையும் கடத்தல் பிரிவில் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.