Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
இரத்த சிவப்பணு, தாய்ப்பாலை அதிகரிக்கும் "பாலக்கீரை".. சூப் செய்து சமைத்து சாப்பிடுவது எப்படி?.!
பல்வேறு சத்துக்கள் நிறைந்த பாலக்கீரை சூப் எவ்வாறு சமைப்பது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.
பாலக்கீரை ரத்த சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால், அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும், இதில் போலிக் ஆசிட் இருப்பதால், கர்ப்பிணிகள் உண்பது மிகவும் நல்லது. அத்துடன் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை சாப்பிடுவதன் மூலமாக பால் சுரக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்
மிளகு சீரகம் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பல் - 5
உப்பு - தேவைக்கேற்ப
பாலக்கீரை - 1 கட்டு
செய்முறை :
★முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கீரையை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து கீரையுடன் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, வெங்காயம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேகவிட்டு இறக்கவும்.
★பின் ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இறுதியாக அதனுடன் பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கினால் பாலக்கீரை சூப் தயாராகிவிடும்.