தைராய்டு பிரச்சனையை குணப்படுத்த இந்த ஜூஸ்களை குடிங்க போதும்.!?
நவீன காலகட்டத்தில் பெண்களை அதிகமாக அச்சுறுத்தும் நோய் தைராய்டு பிரச்சனை. இது 25 முதல் 45 வயது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. சைலன்ட் கில்லர் நோயான தைராய்டு இருந்தால் இதன் அறிகுறி பெரும்பாலோருக்கு தெரியாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றன. இதை சரி செய்ய அதிகமாக செலவு செய்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இது அதிகமாக பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான பெண்களுக்கு கழுத்தின் கீழ் பகுதியில் உள்ள சுரப்பியல் தைராய்டு உருவாகிறது. கழுத்தின் கீழ்பகுதியில் உள்ள சுரப்பி சிறியதாக இருந்தாலும் நம் உடலின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியமான உறுப்பாக இது இருந்து வருகிறது. இதில் பிரச்சனை ஏற்படும் போது நம் உடலில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றது. எனவே இந்த தைராய்டு பிரச்சினையை வீட்டு வைத்திய முறைப்படி சரி செய்யலாம். குறிப்பாக இந்த ஜூஸ்ஸை குடித்து வந்தால் தைராய்டு பிரச்சினை எளிதாக சரி செய்யலாம் என்று சித்த வைத்திய மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொத்தமல்லி ஜுஸ்:
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலைகள், ஒரு கைப்பிடி,
ஒரு மாதுளம்பழம்,கேரட் - 1,
பூசணி விதைகள்-1 டீஸ்பூன்,
சூரிய காந்தி விதைகள் - 1டீஸ்பூன்
செய்முறை
முதலில் பூசணி விதை மற்றும் சூரியகாந்தி விதைகள் நன்றாக காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு கொத்தமல்லி இலைகள், ஒரு மாதுளம் பழம், கேரட், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வருவதால் பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனைகள், கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் உடனடியாக குணமடையும்.