அரிசி மாவை வைத்து சூப்பரான, சுவையான மொறு மொறு வடை செய்வது எப்படி.?



Rice flour vadai recipe in Tamil

பொதுவாக உளுத்த மாவில் தான் மொறு மொறு வடை செய்து பார்த்திருப்போம். இங்கு அரிசி மாவை வைத்து சுவையான மொறு மொறு வடை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 200 கி
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

Rice flour vadai

முதலில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதில் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விடவும். 

பின்னர் அதில் கொத்தமல்லி தழை, அரிசி மாவை சேர்த்து கட்டியின்றி கிளறி ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறி பின்னர் ஆற விடவும். அந்த மாவை வடையாக தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு எடுத்தால் சுவையான மொறு மொறு வடை தயார்.