திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
அதிகாலை எழுந்ததும் இதை செய்தால், அழகு தானாக வரும்.. உங்கள் சருமம் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்.!
இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழல் காரணமாக சருமம் பாதிக்கப்பட்டு பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த பிரச்சனை பலருக்கும் உண்டு. அவ்வாறு, இல்லமால் சருமத்தை பொலிவாக எப்படி மாற்றுவது என்று இந்த பதிவில் காணலாம்.
அதிகாலை எழுந்ததும் செய்ய வேண்டியவை :
காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அவ்வாறு, இல்லாமல் பழச்சாறு அல்லது சுரைக்காய் சாறு, நெல்லிக்காய் சாறு குடிப்பது மிகவும் நல்லது. இவ்வகையான பானங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்து பொலிவாக மாற்றும். மேலும், குளிர்க்காலமாக இருந்தால் செம்பருத்தி பூ டீ, ஏலக்காய் டீ குடிக்கலாம்.
இதையும் படிங்க: இப்படி ஒரு மாண்புமிகு முதலாளியா? பெஞ்சல் புயலும், விடுமுறையும்.. வைரலாகும் உரையாடல்.!
சருமத்தை பொலிவாக மாற்ற ஐஸ்கட்டி அல்லது ஐஸ்கட்டி கலந்த தண்ணீரில் முகத்தை கழுவலாம். இதனால் சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் சளி பிரச்சனை உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
காலையில் எழுந்ததும் சுடு தண்ணீரில் குளிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், இவ்வாறு குளிப்பது சருமத்தை விரைவில் சுருக்கம் அடைய செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால், முடிந்தவரை சாதாரண நீரில் குளிப்பது சருமத்திற்கு நல்லது. அதோடு, குளித்து முடித்ததும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமம் பொலிவிழக்காமல் பாதுகாக்கும்.
சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக குளியல் பொடி பயன்படுத்தி குளிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், வாரம் 2 முறை முகத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக் போட்டு 1/2 மணி நேரம் கழித்து கழுவி வந்தால் சருமம் பொலிவு பொறும்.
குறிப்பு :
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன் சருமநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இதையும் படிங்க: "காட்டுயானைக்கு காதல் வந்தல்லோ" - பெண்ணை பார்த்ததும் பின்வாங்கிய யானை.. நெட்டிசன்கள் கலாய்.!