தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அச்சச்சோ.. குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! கோடைகாலத்தில் சரக்கு அடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?..!
மதுபானம் என்பது மனித இனத்தால் ஒழிக்கப்படவேண்டியது என்றாலும், அவை வியாபாரம் உட்பட பல காரணங்களுக்காக அரசாலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடைகாலத்தில் பொதுவாகவே மனிதனின் உடல் சூடு என்பது அதிகரித்து காணப்படும். இவை நமது சுற்றுப்புறத்தில் உள்ள வெப்பம் நமது உடலை பாதிப்பதால் ஏற்படுகிறது. இதனால் தலைவலி, மயக்கம், உஷ்ணகடுப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
இவ்வாறான தருணங்களை நாம் சரி செய்ய இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கூழ் வகைகள் போன்ற பல இயற்கை பழச்சாறுகளை வாங்கி சாப்பிட வேண்டும். இதனை கண்டுகொள்ளாமல் விட்டு உடல் சூடு அதிகரித்தால் கல்லீரல் தொற்று, மயக்கம், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு உயிரே கூட பறிபோகலாம்.
நமது உடல் தாங்க இயலாத அளவு சூடாகிவிடும் பட்சத்தில், Heat Stroke எனப்படும் உடற்சூடு பக்கவாதம் தொடர்பான பிரச்சனையும் ஏற்படும். சாதரணமாகவே மதுபானத்தில் ஹாட் அல்லது பீர் என எதை அருந்தினாலும், அவை உடல் சூட்டை அதிகரிக்கும். சிலர் கோடை காலத்தில் ஜில் என்ற பீர் குடித்தால் உடல் சூடு குறையும் என்பார்கள்.
அவை முற்றிலும் தவறான கூற்று. ஓருவர் அருந்தும் மதுபானத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு நமது உடல் சூட்டை கடுமையாக அதிகரிக்கும். எந்தளவு மதுபானம் எடுத்துக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு தண்ணீர் உடலுக்கு செல்லும். அவை குறைந்தால் கட்டாயம் மரணத்திற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே கோடையில் உடலின் சூடு அதிகரித்து ஒவ்வொருவரும் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், இவ்வாறான தருணத்தில் பியர், ஹாட் என மதுபானத்தை அருந்தினால் கட்டாயம் உடல் சூடு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.