தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வைட்டமின் பி, டி நிறைந்து காணப்படும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு தோசை... ருசியாக சமைத்து சாப்பிடுவது எப்படி..!
பல்வேறு சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு தோசை எப்படி சமைப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி, இரும்பு சத்துக்கள் காணப்படுகிறது. தொடர்ந்து இதனை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதன் மூலமாக உடலுக்கு எண்ணற்ற சத்துக்கள் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1
வெங்காயம் - 1
தோசை மாவு - 1 கப்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 75 கிராம்
செய்முறை :
★முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்து, கேரட்டை துருவி கொள்ள வேண்டும்.
★பின் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி, தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும்.
★அரைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கேரட் சேர்த்து கலக்கவும்.
★இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை ஊற்றி வெந்ததும், திருப்பிபோட்டு வேகவைத்து பரிமாறினால் சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை தயாராகிவிடும்.