காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கோடை வெப்பத்தை தாங்க முடியலையா.? உடலை காக்க இதை செய்யுங்கள்.!
வெயிலால் உடலில் ஏற்படும் தீங்குகளில் இருந்து நம்மை எப்படி எல்லாம் காத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம். கோடை காலத்தில் உடை தேர்வு என்பது மிகவும் முக்கியம். பருத்தி ஆடைகளை அணிவதால் வியர்வை உறிஞ்சப்பட்டு உடல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. மேலும் வெளியில் செல்லும்போது அடர் நிற உடைகளை தவிர்த்து விட வேண்டும்.
வெள்ளை நிற உடைகளை அணிவதன் மூலம் வெயிலின் பாதிப்பில் இருந்து சிறிது தப்பிக்க முடியும். இறுக்கமான ஆடைகள் வியர்வையை வெளியேற விடாமல் உடலை சூடாக்கி விடும், எனவே காற்றோட்டமான தொடர்பான உடையை அணிவதால், உடல் சூடு குறையும்.கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுவதில் குளிர் பானங்கள் மிக முக்கியமானதாகும். தண்ணீர் அதிகமாக குடித்து நீர் சத்தை உடம்பில் தக்க வைக்க வேண்டும். தண்ணீருக்கு அடுத்தபடியாக கரும்பு சாறு, இளநீர், கூழ், தர்பூசணி, மோர், நுங்கு உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். சருமத்தை பாதுகாக்க வெளியில் செல்லும் பொழுது தொப்பி, குடை மற்றும் சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை உபயோகிக்கலாம்.
அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். உங்கள் சருமத்திற்கு ஏற்றப்படியான சன் ஸ்கிரீனை உபயோகிக்கலாம். அன்றாடம் உடலுக்கும் முகத்திற்கும் மாய்ஸரைசர் பயன்படுத்த வேண்டும். வெயில் காலங்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் பெண்கள் லூஸ் ஹேர் ஸ்டைலை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. அதுபோல ஆண்களும் வெயில் காலத்தில் அடிக்கடி முடி வெட்டிக் கொண்டு இருப்பது நல்லது.