மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிள்ளையாருக்கு பிடித்த கேழ்வரகு கொழுக்கட்டை செய்வது எப்படி?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலான கேழ்வரகு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கேழ்வரகில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கேழ்வரகு கொழுக்கட்டை உண்பதன் மூலம் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.
தேவையான பொருட்கள்:
1) பூரணத்திற்காக
கருப்பட்டி - 200 கிராம்
முழு தேங்காய் - 2
பொடித்த எள் - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 25 கிராம்
2) மேல்மாவிற்காக
தண்ணீர் - அரை லிட்டர்
எண்ணெய் - 50 மிலி
கேழ்வரகு மாவு - 250 கிராம்
உப்பு - 20 கிராம்
செய்முறை:
1) மேல்மாவு செய்யும் முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும் வறுக்க வேண்டும். பின் உப்பு, எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
2) பூரணம் செய்யும் முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொடித்து வைக்கப்பட்ட எள், நெய், தேங்காய் துருவல், ஏலக்காய் துருவல் மற்றும் கருப்பட்டி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் பிடித்து வேகவைத்தால் சுவையான கொழுக்கட்டை தயார்.