இரவில் நகம் வெட்டக்கூடாது - ஏன் தெரியுமா? உண்மைக்காரணம் இதுதான்.!!
பாரம்பரியமான விஷயத்தை கடைபிடிக்கும் வீடுகளில் இரவுநேரத்தில் நகம்வெட்ட அனுமதிப்பது கிடையாது. நாம் நகங்களை கடிப்பதை பார்த்தாலும் அவர்கள் கண்டிப்பது நடந்திருக்கும்.
நகத்தை வெட்டுவது சுகாதாரமான செயல்பாடு என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. நகத்தில் இருக்கும் அழுக்கு நாம் உண்ணும் உணவில் கலந்து நோய்களை ஏற்படுத்தும்.
நகங்களில் சேரும் கிருமிகள் உடலுக்கு பரவாமல் தடுக்க நகத்தை வெட்டுவது சரியானது. எனினும் இரவில் நகம் வெட்டக்கூடாது என்ற பழக்கமானது இருக்கிறது. முந்தைய காலங்களில் மின்சார வசதி இல்லை என்பதால் போதிய வெளிச்சம் இருக்காது.
இதனால் இரவு நேரத்தில் நகத்தை வெட்டினால், அது கீழே விழுந்து அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத நகங்கள் உணவுப் பொருட்கள் வாயிலாக உடலில் கலந்து ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
அதேவேளையில் அதிலிருக்கும் கிருமிகளும் நம்மைச் சுற்றியே வலம் வரும். மதரீதியாக நகம் வெட்டுவதற்கு பல காரணங்கள் கூறினாலும் அறிவியல் ரீதியாக இதுவே உண்மையாகும்.