சுடுகாட்டிற்கு பெண்கள் செல்லக்கூடாது என்பதற்கு இது தான் காரணமா.?!



why-women-do-not-goes-to-certonic

சில பழக்க வழக்கங்களை எதற்காக கடைபிடிக்கிறோம் என்பது கூட தெரியாமல் நாம் பலவற்றை இன்றும் தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வருகிறோம். அப்படிப்பட்ட பழக்கங்களில் ஒன்றுதான், பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்பது. 

ஒரு பெண் தான் இந்த உலகில் அடுத்த தலைமுறையை உருவாகவே காரணமாக இருக்கிறாள். அப்படிப்பட்டவளை தனது தந்தை, மகன் மற்றும் கணவர் ஆகியோரின் இறுதி சடங்குகளில் ஏன் கலந்து கொள்ள விடவில்லை என்ற கேள்வி நமக்கு இருக்கிறது.

சுடுகாட்டில் கெட்ட ஆவிகளின் புழக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அந்த ஆவிகள் ஆண்களை விட பெண்களை எளிதாக பிடித்துக் கொண்டு தனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. எனவே தான் பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்று கூறுவதாக தெரிகிறது.

Certonic

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பெண்களை தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய விடாமல் இருக்க காரணம் சொத்து பிரச்சனை. ஒரு பெண் தனது திருமணம் வரை மட்டுமே பிறந்த வீட்டுடன் உரிமை கொண்டாட முடியும். திருமணமான உடன் அவளுடன் உறவே இருக்காது. பெண்கள் சொத்தில் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகத்தான் இதை கடைபிடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

கொள்ளி போடுபவர்களுக்கு தான் சொத்தில் உரிமை என்று வழக்கம் இருப்பதால் அந்த உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறதாம். பழமொழியில் கூட வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை என்று தான் இருக்கிறது. அந்த இறந்த உடலை எரிக்கும் கடைசி தருணம் வரை மகன்தான் உடன் இருப்பான் என்று தான் அவனுக்கு சொத்துரிமை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

Certonic

என்னதான் மகளை உரிமையுடன் வளர்த்தாலும் அவர் இன்னொரு வீட்டிற்கு திருமணம் செய்து போகக் கூடியவர், கடைசி வரை உடன் இருந்து பார்த்துக் கொள்வது மகன்தான் என்று தான் இந்த பழக்கவழக்கம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறதாம். மேலும், சாவு வீட்டில் வருகை புரிந்திருக்கும் உறவினர்களையும், குழந்தைகளையும் பொறுப்பாக கவனித்துக் கொள்ள பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நடைமுறை பழக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அடுத்தது பெண்கள் மிகவும் மனதளவில் பலவீனமானவர்கள் என்றும், நமக்கு வேண்டப்பட்டவர் எரிக்கப்படுவது அல்லது புதைக்கப்படுவதை பார்த்தால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால்தான் அவர்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்ற பழக்கம்  கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.