பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு என்ன காரணம் தெரியுமா.? முழு விவரம் இதோ!!



woman-black-thread-in-anklet-reason-

பெரும்பாலான பெண்கள் தங்களது வலது காலில் கருப்பு கயிறு கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

பொதுவாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான பெண்கள் தங்களது காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு முக்கிய காரணம் தீய சக்திகள் அவர்களை நெருங்காமல் இருப்பதற்கும், செய்வினை, சூனியங்கள் இவற்றிலிருந்து விடுபடவும் கருப்பு கயிற்றை காலில் கட்டி கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தினை குறைப்பதுடன் கண் திருஷ்டியும் அண்டாமல் இருக்கும். 

Black thread

மேலும் இந்த கருப்பு கயிற்றை பெண்கள் தங்களது வலது காலில் தான் கட்ட வேண்டும். மேலும் இந்த கருப்பு கயிற்றை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் கட்டுவது மிகவும் சிறந்தது.