96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆந்திராவில் பரபரப்பு: பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜாவை கொலை செய்ய முயற்சி..!
ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் விசாகா கர்ஜனை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அம்மாநில அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளர்நாகேஸ்வரராவ் உள்ளிட்ட காவல்துறையினரும் காயமடைந்தனர்.
இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஜனசேனா கட்சியை சேர்ந்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், அமைச்சர் ரோஜாவை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.