கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: எஸ்.டி.பி.ஐ போராட்டத்தால் பரபரப்பு..!
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் என். ஐ. ஏ மற்றும் அமலாக்கதுறையினர் இரண்டு கட்டங்களாக நடத்திய சோதனையில் அந்த அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் பணபரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து 240க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறலாம் என்று உளவு பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தக்கலை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தக்கலை உதவி காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலை மையில், திருவிதாங்கோடு சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டம் நடத்துவதற்காக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஒவ்வொருவராக அந்த பகுதியில் கூடினர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைது செய்தனர். எஸ்.டி.பி.ஐ மாநில நிர்வாகி செரீப் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.