#Loksabha | "என்ன நடந்தாலும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்..." தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி.!!



caa-will-be-implemented-at-any-cost-rajnath-during-his

2024 ஆம் வருட பாராளுமன்ற பொது தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி கேரளா கர்நாடகா உட்பட மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.

கொல்கத்தா உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனைத்து கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

politicsஇந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய அரசு என்ன விலை கொடுத்தேனும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

politicsஆனால் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியினர் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த சட்டம் தொடர்பான தவறான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சிஏஏ சட்டத்தை நிச்சயமாக அமல்படுத்தும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.