திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் நரேந்திர மோடி" - தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பாராட்டு.!
2024 மக்களவை தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இன்று ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோருகிறார்.
இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய வளாகத்தில் தேசிய ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு, அவர் தலைமையில் ஆட்சி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனமுருகி வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!
சந்திரபாபு நாயுடு பாராட்டு
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு பேசுகையில், "2047 ல் பிரதமர் மோடி கூறியதுபோல, இந்தியா கட்டாயம் வல்லரசாகும். சரியான நேரத்தில், சரியான தலைவரை இந்திய மக்கள் தேர்வு செய்துள்ளனர். உலகளவில் மோடியின் தலைமையில் உள்ள இந்திய அரசு முதல் இரண்டு இடத்திற்குள் வரும்.
சர்வதேச அளவில் தலைசிறந்த தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில், தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பெருமிதத்தை அடைகிறது. உலகின் சக்திவாய்ந்த நபராக பிரதமர் விளங்குகிறார், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா " என பேசினார்.
இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனமுருகி வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!