தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking || வெற்றி முகத்தில் காங்கிரஸ்..!! எம்.எல்.ஏ-க்களை ஒரே இடத்தில் தங்க வைக்க திட்டம்..!!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 113 தொகுதிகளை கைப்பற்றுவது அவசியம். ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டன. 224 தொகுதிகளில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது மின்ணனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, ஆளும் பா.ஜனதா 75 இடங்களிலும், காங்கிரஸ் 118 இடங்களிலும், ம.ஜ.த 26 இடங்களிலும், மற்ற கட்சிகள் 07 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தான் போட்டியிட்ட தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
இதற்கிடையே ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அதிரடி வியூகம் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றி முகத்தில் உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரஞ்சித் சிங் வாலா ஆலோசனைநடத்தி வருகின்றனர்.
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கவும் அல்லது தமிழகத்திற்கு அழைத்து செல்லவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சி தாவலை தடுப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.