மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்சி துண்டுடன் வந்து பரபரப்பு ஏற்படுத்திய தே.மு.தி.க வேட்பாளர்!.. உள்ளே நுழைய அனுமதி மறுப்பு..!
ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில், இந்த தேர்தலில் தே.மு.தி.க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் தனது கட்சி துண்டு மற்றும் வேட்டி அணிந்து வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வந்தார்.
இதனை கண்ட தேர்தல் அதிகாரி அவருக்கு வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி மறுத்தார். இதனையடுத்து தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க வேட்பாளருக்கு கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி இல்லை என்று தேர்தல் அதிகாரி அறிவுத்தினார்.
இதனை தொடர்ந்து தனது கட்சி வேட்டி மற்றும் துண்டை அகற்றிய தே.மு.தி.க வேட்பாளர் ஆனந்த், மாற்று உடையணிந்து வாக்களித்துவிட்டு புறப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.