மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BudgetSession 2023-24: சோழர்களுக்கு அருங்காட்சியகம்., சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் - பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு..!!
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை 10 மணியளவில் 2023 - 2024 ம் ஆண்டுக்கான பொது இ-பட்ஜெட் தாக்கலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மற்றும் சிலிண்டர் மானியம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய போது, "கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ₹62,000 கோடியில் இருந்து ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம்.
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும்.
வரலாறு காணும் சோழர்களின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில், தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இளம் வீரர்கள், குழந்தைகள், சிறுவர்கள், இல்லத்தரசிகள், முதியோர்கள் என அனைவரும் விளையாடும் வகையில் சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்".