மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் அறிந்திராதா கலைஞர் கருணாநிதியின் மறுபக்கம்! நண்பருக்காக அவர் செய்த செயல்!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தொண்டர்கள் மீதும், அவரது நண்பர்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர். ஒருமுறை கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தன்னை பார்க்க வந்த நண்பன் தென்னன் என்பவரிடம் கோபமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த நண்பர் தென்னன் திருவாரூருக்குக் கிளம்பிப் போய்விட்டார். அதன்பின், கலைஞர், நண்பனின் மனதைப் புண்படுத்திவிட்டோமே என்று மனம் வருந்தி மன்னிப்பு கடிதம் ஒன்றை நண்பர் தென்னனுக்கு எழுதி அனுப்பி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்தது.
அன்புள்ள நண்பர் தென்னனுக்கு, நீ சென்னையில் வீட்டுக்கு வந்தபோது, அன்று என்னைக் காண காத்திருந்தாய். ஆனால் நான் கோபத்திலும் உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன். வழக்கம்போல் பொறுத்துக்கொள்க.
என்றும் உன் நண்பன், முக.’ என்று மன்னிப்புக் கேட்பதுபோல் வருத்தம் தெரிவித்து எழுதி, அதில் தன் கைப்படவே தென்னனின் முகவரியையும் எழுதி அனுப்பியுள்ளார் கலைஞர் அவர்கள்.
நண்பர்களின் மீது அதிக அக்கறை கொண்டவர் கருணாநிதி என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே சான்று. இதோ அந்த கடிதம்.