மத்திய அரசின் புதிய திட்டம்! பிரதமர் மோடியை பாராட்டிய திமுக எம்.பி கனிமொழி!



kanimozi talk about modi

நேற்றைய சுதந்திர தின விழாவில் செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெண்களின் திருமண வயது 18ல் இருந்து 21-ஆக  உயர்த்தப் பட்டால், அது குழந்தைகளின் நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் இதனால் மத்திய அரசின் இந்த திட்டத்தை பல்வேறு தரப்பிலும் வரவேற்கின்றனர். இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,"பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.