மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Lok Sabha 2024 | தமிழகத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்.!! ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்ட தேர்தல் கணிப்பு.!!
வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை வெளியிட்டது.
2024 ஆம் வருட பொது தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சி 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார் மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தற்போது நாட்டில் இருக்கும் மக்களின் மனநிலையை பார்க்கும் போது பாஜக 370 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நான் ஒரு இடங்களுக்கும் மேலும் கைப்பற்றும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிசயம் நிகழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.