2-வது இடத்தை கூட பாஜக பிடிக்காது.?! அனைத்து தொகுதிகளும் அம்பேல் தான்..?!



pinarayi-vijayan-about-kerala-bjp-status

18 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியின் முக்கிய தலைவர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 

bjp

கடந்த தேர்தலில் ஒரே கூட்டணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் இந்த முறை தமிழகத்தில் தனித்தனியே போட்டியிடுகின்றன. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிவின் மேல் மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

bjp

அது மட்டுமல்லாமல் கடந்த தேர்தலை விட பாஜகவிற்கு இது சவாலான தேர்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கேரளாவில், பாஜக வெற்றி பெறுவது மிகப்பெரிய குதிரைக்கொம்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், " பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய அளவில் இணைந்துள்ளோம். பாஜக நிச்சயம் கேரளாவில் இருக்கும் 20 தொகுதிகளிலும் தோல்வியை தழுவும். தேசிய அளவில் இரண்டாவது இடத்தை கூட பிடிப்பது கேள்விக்குறிதான்."என்று தெரிவித்துள்ளார்