ராகுலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! "பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் முதல்பணி என்றால் அப்போ மக்கள் பணி..?



ragul-gandhis-first-vision

இந்தியாவில் அரசியல் கட்சிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. பொதுவாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்ய போகிறோம் என்று சொல்லித்தான் கட்சியை துவங்குகின்றனர். ஆனால் ஒவ்வொரு கட்சியும் ஆளும் கட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட்டு நாம் அரியணையில் அமர வேண்டும் என்றுதான் எண்ணுகின்றனர்.

மக்களுக்கு சேவை செய்வதுதான் தங்களது நோக்கம் என்றால் நாட்டை எந்தக் கட்சி ஆண்டால் என்ன? எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்ற வைக்க முடியும். ஆனால் இதனை எந்த கட்சியும் இங்கு செய்வதில்லை. எப்போது பார்த்தாலும் ஆளுங்கட்சியை குறை கூறிக்கொண்டு இருப்பதே இப்போது அரசியல் என்பது ஆகிவிட்டது.

தங்களுடைய கட்சி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர். ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு தங்களுடைய கருத்துகளை கூறி மக்களுக்கு நல்ல சேவையை பெற்று தந்திட யாரும் இங்கு விரும்புவதில்லை. மாறாக ஆளும் கட்சியை குறை கூறிக்கொண்டே தான் என்று இங்கு அரசியல் நடத்துகின்றனர். 

RahulGandhiLeadsHTSummit

இதன் வெளிப்பாடாக தான் புதுடெல்லியில் நடைபெற்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் கான்கிளேவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு அமைகிறது. அப்போது பேசிய அவர் "நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க-வை தோற்கடிப்பதுதான் எங்களுடைய முதல் பணி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். கூட்டணிக் கட்சிகள் விரும்பினால், நான் பிரதமராகத் தயார்" என்று தெரிவித்தார்.

RahulGandhiLeadsHTSummit

இவ்வாறு அவர் பேசியதிலிருந்து என்ன தெரிகின்றது. எப்படியாவது பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்பதே அவருடைய முதல் குறிக்கோளாக இருந்து வருகிறது. யார் பிரதமராக வந்தால் மக்களுக்கு நல்ல சேவையை செய்வார்கள் என்று கூட தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கும் இவர், எப்படி ஆட்சிக்கு வந்த பின்பு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரப் போகிறார் என்று பலர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இவருடைய குறிக்கோள் "நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதா..! இல்லை இவர் மகிழ்ச்சியோடு அரியணையில் அமர வேண்டும் என்பதா.." என்ற சந்தேகமும் எழுகின்றது.

குறைகளை மட்டுமே கூறிவரும் எந்த அரசியல்வாதிகளும் அந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது என்று ஆளும் கட்சிக்கு ஆலோசனை கூறாமல் இருப்பது ஏன்..!

ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு அரசியல் நடத்தும் இந்த கலாச்சாரம் ஒழிந்தால் தான் நமது நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழி பிறக்கும். மக்களாகிய நாம் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானது.