மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை: இன்று 4 வது நாளாக ராகுல் காந்தி ஆஜர்..!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் 4 வது நாளாக ராகுல்காந்தி இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்.பி.யுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி அறிவுறுத்தினர். இதன்படி ராகுல் காந்தி தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு ராகுல்காந்தி கோரிக்கை வைத்திருந்தார் .
இந்த நிலையில், ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து மூன்று நாட்களுக்கு விலக்கு அளித்தது .
மூன்று நாள் அவகாசம் முடிவுற்றதை அடுத்து நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை பங்கு விற்பனை குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல்காந்தி. ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று 4வது நாளாக வழக்கு விசாரணை தொடங்குகிறது.