பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!



rahulkandhiporattam

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுக்க இன்று திங்கள்கிழமை முழு அடைப்பு நடக்கிறது. டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணி சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு ஆம் ஆத்மி கட்சியினரும் பேரணியில் பங்கேற்பு தற்போது ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கிறது ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை பேரணி இடதுசாரி அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டன.

மக்கள் பிரச்சனையில் மோடி அமைதியாக இருக்கிறார் -ராகுல்.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி மோடி பேசவில்லை -ராகுல் விவசாயிகளின் கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை -ராகுல் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து வாய் திறக்கவில்லை -ராகுல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது -ராகுல்.