பிரபாகரனை ஜாமினில் எடுத்த திமுக? ஆர்எஸ் பாரதி பேச்சுக்கு பதிலடி .. தலைசுற்றவைக்கும் தகவல்.!



RS Bharathi Speech on LTTE Prabhakaran

 

திருநெல்வேலியில் நடைபெற்ற பொது பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் & எம்.பி ஆர்எஸ் பாரதி, "நான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தபோது, 1983 க்கு முன்பு, பிரபாகரன் சென்னைக்கு வந்து தி.நகர் இரண்டு குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து, பிரபாகரன் கைதாகினர். அவர் கைது செய்யப்பட்டபோது, சென்னையில் அவர் இருந்ததால், ஜாமின் கொடுக்க ஆள் இல்லை. 

நான் அன்று சைதை நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்க செயலாளராக இருந்தபோது, தலைவர் கலைஞர் என்னை தொடர்புகொண்டு,  பிரபாகரனை எப்படியேனும் ஜாமினில் எடுக்க வேண்டும் என கூறினார். உள்ளூர் முகவரி வேண்டும் என்பது நீதிமன்ற விதி. அன்று எம்.ஜி.ஆரின் ஆட்சி நடந்தது. நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு ஆதரவாக ஆர்.எஸ் பாரதி அனுமதியாகி, சொந்த ஜாமினில் வெளியே எடுத்தேன். பின் மறுநாள் தப்பித்துச் சென்றார். சீமான் அவரின் பெயரை வைத்து ஏமாற்றுகிறாய்" என  பேசினார் . 

இதையும் படிங்க: ஒருத்தன் துணிந்துவிட்டால் உன் நிலைமை என்ன? - சீமானுக்கு ஆர்.எஸ் பாரதி பகிரங்க எச்சரிக்கை...!

ஆர்.எஸ் பாரதி பேசிய இவ்விசயம் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ள கே . எஸ் ராதாகிருஷ்ணன், தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறார். அந்த பதிவில், "பிரபாகரனை பாண்டிபஜார் சம்பவத்தில் 1982 ஆகஸ்டுஇல் பெயில் எடுத்தவன் அடியேன். நெடுமாறன் இருக்கிறார். அதில் ஒரு குற்றவாளி ரவிந்திரன் லண்டனஇல் உள்ளார். இன்றும் விகடன் ராவ், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கல்கி ப்ரியன், தாரசு ஷ்யாம் போன்றவர்கள் உள்ளனர். தோழமை கட்சி தலைவர் வைகோவிடம் கேட்கவும்.(வழக்கு எணSc no 2/1983 ) ஆவணங்கள் உள்ளன திரு ஆர்.எஸ். பாரதி அவர்களே." என கூறியுள்ளார் . 

 

இதையும் படிங்க: பெரியாருக்கு எதிராக புலம்பும் சீமானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; பரிதாபமா இருக்கு.! சத்யராஜ் கலாய்.!!