உதயநிதியை வரவேற்க கவர்ச்சி நடனம்! நிகழ்ச்சிக்கு வரும் பெண்களுக்கு ரூ.200 பட்டுவாடா: களைகட்டிய தி.மு.க நிகழ்ச்சி..!



Rs.200 will be given to women who come to welcome Udhayanidhi for the charm dance program

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள ஆத்துமேடு அண்ணா திடலில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சிக்கு வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அக்கட்சியினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நிகழ்ச்சி நடக்கும் அண்ணா திடல் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்திற்கு கொடிகள் நடப்பட்டு பேனர்களும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் டாட்ட ஏஸ் வாகனத்தின் மூலம் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அவர்களது பெயர்களை சிலர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி உதயநிதி ஸ்டாலின் வர தாமதம் ஆனதால் 12 மணிவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விழா மேடயில் தி.மு.கவின் கொள்கைகளை விளக்கும் கட்சி பாடலுக்கு நடன குழுவினர் கவர்ச்சி நடனம் ஆடியது பல்வேறு தரப்பினரிடையே இடையே முகசுளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் தி.மு.க தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்தது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. உசிலம்பட்டியை சேர்ந்த  பெண் ஒருவர் 200 ரூபாய் தருவதாக கூறி அழைத்து வந்ததாகவும், பணம் தராமல் திருப்பி அனுப்புவதாகவும் கூறி நடுரோட்டில் அமர்ந்து புலம்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.