மேகதாது விவகாரத்தை முதல்வர் எளிதில் விடமாட்டார் - கே.எஸ் அழகிரி பரபரப்பு பேட்டி.. அண்ணாமலை மீது சரமாரி பாய்ச்சல்.!



  Tamilnadu Congress party KS Alagiri about Annamalai Statement 

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி அண்ணாமலையின் மேகதாது அணை விவகார கருத்து குறித்து பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அண்ணாமலை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. காவிரி மேகதாது அணை விவகாரத்தில் முழுக்க முழுக்க அண்ணாமலை அரசியல் செய்ய நினைக்கிறார். 

கர்நாடக மாநில அமைச்சர் மேகதாதுவில் அணைகட்டுவோம் என்று கூறியிருப்பதை பிடித்து அண்ணாமலை பேசுகிறார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அணைகட்ட முடியாது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். 

முதலமைச்சர் டெல்டா பகுதியை சார்ந்தவர். மண்ணின் மைந்தர். இந்த விஷயத்தில் அவர் எதற்காக அலட்சியமாக இருக்கப்போகிறார்?. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் அண்ணாமலை சொல்ல வேண்டாம். இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான். 

Tamilnadu Congress party

பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது மேகதாது அணை கட்டும் திட்டத்தை தயாரித்து, மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றார். மத்தியிலும்-மாநிலத்திலும் பாஜக அரசு இருந்ததால், சட்டப்படி கொடுக்க கூடாத அனுமதியை கொடுத்தார்கள். 

அந்த சமயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக மவுனமாகவே இருந்தது. இவை அண்ணாமலைக்கு தெரியுமா?" என பேசினார்.