#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமோகமாக நடைபெற்ற தொழில்... கணவன் மனைவியை; வலை விரித்து பிடித்த போலீசார்...!!
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவி கைது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் தொழிற்சாலைகளில், வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கும்பல் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை செய்வதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர், கொரட்டூர், கட்டளைபாக்கம், ரயில் நிலையங்களில் காவல்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு பெணுடன், இரண்டு ஆண்கள் மூட்டையாக கஞ்சாவுடன் பிடிபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த தீனா (29), அவரது மனைவி கௌசல்யா (27), மற்றும் நெமிலிச்சேரி சேர்ந்த சதாசிவம் என்பது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 24 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.