#Breaking: தனது ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து செய்தி கூறிய தமிழ்நாடு முதல்வர்.. என்ன சொன்னார் தெரியுமா?.. முழு விபரம் உள்ளே..!



TN chief minister wishes Happy New year in different type

 

தமிழ்நாடு முதல்வராக நம்பர் 1 நிலையில் இருந்து, இன்று தமிழத்தையும் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இளம் தலைமுறை போதைப்பொருள் உபயோகத்தை கையில் எடுக்காமல் பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் புத்தாண்டு வாழ்த்து குறிப்பில், "எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஆண்டொன்று போனால் வளர்ச்சி பலமடங்கு கூடும் என்று வாழ்வதே வாழ்க்கை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு அனைத்து துறையிலும் வளர்ச்சி, எழுச்சி இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் நமது மாநிலம் சந்தித்த மந்த நிலையை நாம் மாற்றியுள்ளோம். 

dmk

அதனால் மக்களின் வாழ்வு மேம்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் உங்களின் வளர்ச்சி பெறுக, வாழ்க்கை நலன்பெற நானும், எனது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம். உங்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பதே எனக்கு முக்கியம். அதனாலேயே எனது முதல்வர் பதவியை பொறுப்பாக கருதி பணியாற்றி வருகிறேன். கடந்த ஓராண்டாக தமிழ்நாடு மக்களுக்கு அரசு பல சாதனைகள் செய்துள்ளது. 

அதனை பட்டியல்போட்டு கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் பலன்பெற்று இருக்கும் நீங்களே அதற்கு சாட்சி. ஆட்சிப்பொறுப்பேற்றதும் வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாது, வாக்களிக்க தவறியவர்கள் பாராட்டும் முதல்வராக நான் செயல்படுவேன் என தெரிவிதித்தேன். எந்த நிகழ்ச்சியிலும் மக்களாகிய உங்களின் அன்பை அறிகிறேன். உங்களின் பாராட்டுகளை பணிவோடு ஏற்றுக்கொள்கிறீறேன். அவை நான் பணிவோடு பணியாற்ற உதவுகிறது. 

கடந்த ஆண்டில் இந்தியாவில் நம்பர் 1 முதல்வராகவும் நான் உயர்ந்துள்ளேன். தற்போது 12 க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் முன்னுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசை சார்ந்தோரின் உழைப்புக்கு கிடைத்த பரிசே வெற்றி. நித்தமும் ஓய்வில்லாமல் நான் உழைத்து வருகிறேன். கடந்த ஓராண்டில் 640 க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்துஇவ்ண்டுள்ளேன். 550 க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள் ஆகும். 8 ஆயிரம் கிலோமீட்டர் சுற்றி வந்துள்ளேன். 

dmk

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களுக்கு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 1 கோடி மக்கள் பலன் பெற்றுள்ளனர். 2 கோடி குடும்பத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் 33 இலட்சம் மகளிர் பலன் பெற்றுள்ளனர். இன்னும் பல திட்டங்கள் வரவுள்ளான. திராவிட மாடல் ஆட்சி அனைவருக்குமான சமூக ஆட்சி ஆகும். தமிழ்நாடு இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக இருக்கும். நம்மை பிளவுபடுத்தும் சாதிய, மதவாத சக்திகளுக்கு நாம் இடமளிக்க கூடாது. இன்றைய இளைய சமுதாயம் படிப்பு படிப்பு என இருக்க வேண்டும். 

உங்களின் பெற்றோரை நீங்கள் பெருமைப்படுத்த வேண்டும். படிப்பை திசைதிருப்பி உடல், மன நலனுக்கு கேடு விளைவிக்கும் போதைப்பொருளுக்கு அடிமையாக கூடாது. கடந்த ஆண்டை போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக புதுவாழ்வு தருக. நன்றி" என பேசினார்.