53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உங்களின் ராசிக்கான அந்தரங்க வாழ்க்கை, காதல் எப்படி?.. இப்பவே தெரிந்துகொண்டு குதூகலியுங்கள்.!
நமது அந்தரங்க வாழ்க்கை என்பது இன்பமாக அமைய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எவை எப்படியிருப்பினும் தம்பதிகளின் அன்பும், காதலும், இணக்கமும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று நாம் நமது காதல் மற்றும் அந்தரங்க விஷயங்களில் ராசிகள் ரீதியிலான பொதுப்பலன்களை காணுவோம்.
மேஷம்: மேஷராசிக்காரர்கள் எப்போதும் காதலில் நாயகனாக திகழ்வார்கள். எதிலும் நாட்டமில்லாமலும், திருப்தி அடையாதவராக இருந்தாலும், இவரின் குணத்தால் காதலிக்கும்படி அமைந்தாலும், காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால், இவர் நிச்சயமாக காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் காதல் வித்தையில் கைதேர்ந்தவராக இருப்பார்கள். தாங்கள் விரும்பும் நபரை எளிதாக கவர்ந்து காதலில் விழவைப்பதில் கில்லாடியும் கூட. இவர்களின் காதல் என்பது உண்மையானதாக, தூய்மையானதாக இருக்கும். தாம்பத்திய விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டு இருப்பார்கள்
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் திரைத்துறையிலோ அல்லது எழுத்தாளராகவோ இருந்தால் அதிக ரசிகர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே தங்களை தாங்களே காதலிக்கும் குணம் கொண்டோர். எதிர்பாலரிடம் ஆர்வம் ஏற்பட்டு நாளடைவில் மறையும். இவர்களுக்கு காதல் இயல்பானது என்றாலும், துலாம் ராசியினரோடு சிறந்த தாம்பத்தியம் அமையும். மகரம் மற்றும் மேஷ ராசிகள் கவரப்படுவார்கள். இவர்களின் ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு எப்போதும் காதல் என்பது ஒவ்வாது. இவர்கள் குழந்தைகள், உறவினர்களின் மீது அன்பை செலுத்தலாம். உணவு, தாம்பத்தியத்தை சமமாக கருதும் கடக ராசிக்காரர்கள், அவர்களை காதலிப்போரை சுய மரியாதையை, யதார்த்தத்தை இழக்க வைப்பார்கள். சில நேரங்களில் காதலில் விழுந்தாலும், அவை தோல்வி அடையலாம். ஆகையால் இவர்கள் காதலில் விழாமல் இருப்பது நல்லது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் கொண்ட காதல் மகத்துவமானது. காதலிக்கப்படுவதையும், காதலிப்பதையும் மிகவும் அதிமுகாம்க விரும்புவார்கள். இவர்களுக்கு காதல் திருமண யோகம் இருக்கிறது. இவர்களின் இதயம் பல்வேறு விஷயங்களை கொண்டிருந்தாலும், மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருப்பினும், சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள்.
ஒருவரை விட்டு மற்றொருவரை காதலிக்கும் எண்ணம் இருக்கும். சரி தவறுகளை உணர்ந்தாலும் திருத்திக்கொள்ளமாட்டார்கள். காதல் எண்ணம் இருந்தாலும், சிம்மராசி பெண்களின் கணவர் இனிமையான காதல் வாழ்க்கையை வாழுவார்கள். சிம்மராசிக்காரர்கள் யாரை வேண்டும் என்றாலும் தன்பக்கம் கவரலாம். அவர்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பார்கள். காதலில் திறம்பட செயல்படாத சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எண்ணம்போல் அமையும்.
கன்னி: கன்னிராசிக்காரர்கள் அன்புடையவர்களாக மட்டும் அல்லாமல் கடமை உணர்வும் ஒருங்கே கொண்டவர்கள். இவர்கள் காதல், அன்பு விஷயங்களில் யோசித்து செயல்படுவார்கள். காதல், அன்பை உடலால் இன்றி மனத்தால் நினைப்பவர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் விருப்பம் கொண்ட கன்னிராசியினர், நல்ல குணம் கொண்டவர்கள். இலட்சியத்தை கடைபிடிக்காதவர்கள். இவர்களுக்கு அன்பு மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது. ஒருவரை சந்தோஷமாக இருக்க வைத்து சந்தோஷமாவார்கள். விருச்சிக ராசியினருடன் மனதளவிலும், மகர ராசியினருடன் உடலளவிலும் கூடுவார்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் யாவரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவம், நிகழ்ச்சிகளை எதிர்கொள்வார்கள். இவர்களுக்கு பிறரை எளிதில் கவரும் ஆற்றல் உண்டு என்பதால், காதல் கைவந்த கலை. இவர்களுக்கு காதல் திருமணம் என்பது உகந்தது இல்லை. இவர்களின் காதல் திருமணம் தோல்வியை அடையலாம். துலாம் ராசியினர் காதல் உணர்வை கொண்டதாலும், பெண்கள் சிறந்த காதலியாக இருப்பார்கள். சிறந்த குணம் இருக்காது. விருட்சிக ராசியினருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் சிறப்பு.
விருச்சகம்: விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்பும் நபர்கள் ஆவார்கள். தான் காதலிக்கும் எண்ணத்தை விட, தன்னை காதலிக்கும் எண்ணத்தையே கொண்டிருப்பார்கள். பழகுவோரிடம் நல்ல குணத்தை கற்றுக்கொண்டு சிறந்த மனிதராக இருப்பார்கள். பெண்கள் பார்க்கலாம் என்பதை விட, பெண்கள் தன்னை காண வேண்டும் என்று எண்ணும் காரணத்தால் காதலில் எட்டாத கனிகள் ஆவார்கள்.
இவர்களுக்கு வயது அதிகரிக்க எண்ணம் அதிகமாகும். தன்னையே விரும்பும் நபராகவும், சில நேரத்தில் வெறுக்கும் நபராகவும் இருப்பார்கள். காதல், தாம்பத்தியம் போன்ற விஷயங்களை முற்றும் உணர்ந்தவர் போல வாழும் இவர்கள், இளமையில் தடுமாறினாலும் சிந்தனையால் நல்வழிப்படுவார்கள். இவர்களின் வாழ்நாட்கள் அமைதி, சந்தோசத்துடன் செல்லும்,
தனுசு: தனுஷுராசிக்காரர்களின் காதல் வெற்றி அடையும். இவர்கள் காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களின் இலட்சியம் உயர்ந்தது. காதலில் வெற்றியடைய தொடர்ந்து போராடுவார்கள். காதலிப்பதில் ஆயுளில் பெரும்பாலான தருணத்தை செலவழிப்பார்கள். அமைதியும், ஆக்ரோஷமும் இவர்களின் இயல்பு குணம் ஆகும்.
காதல் எண்ணம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். துணையை பெருமளவு விரும்பும் தனுசு ராசிக்காரர்கள், அதிக அன்பு செலுத்தும் நபராவார். இவர்கள் மேஷம் அல்லது மிதுன ராசியினரை திருமணம் செய்தால் நலம். அதிலும் மேஷ ராசிக்காரர்களுடன் காதல் வயப்பாடு இயல்பாகவே அதிகரித்திடும்.
மகரம்: மகர ராசிக்காரர்களின் காதல் முக்கியத்துவம் பெற்றது. அவர்கள் உண்ணாமல், உறங்காமல் இருந்தாலும் காதல் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். இவர்களுக்கு காதலியாக இருந்தால் அன்பு குறைவு தான் என்றாலும், காதலராக இருந்தால் காதலுக்கு வலிமை உண்டு. யாரையும் எளிதில் நம்பிவிடும் மகர ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியினரோடு காதல் அனுபவம் இருக்கும். மகர ராசியினர் ஆத்மார்த்த காதல் கொண்டவர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்கள். காதல் வாழ்க்கை என்ற அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலும், காதலைப்பற்றி கற்பனையுடன் இருப்பவர்கள். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வது, புரிந்திருப்பது மட்டுமே காதல் என நம்புவார்கள். காதலை மனரீதியாக மதித்து வெற்றி அடைவார்கள். கும்பராசியினருக்கு எதிர் பாலினத்தவரோடு ஏற்படும் ஈர்ப்பு சில நேரத்தில் விபரீதத்திலும் முடியும்.
மீனம்: மீனராசிக்காரர்களுக்கு அன்பு, பொறுமை என்றும் நிலைத்து நிற்கும். எப்போதும் இவர்களின் வாழ்க்கையில் வெற்றி என்பது நிலைபெற்று இருக்கும். இவர்களின் சுபாவம் அந்தரங்க தனிமை ஆசை கொண்டவர்கள் என்றாலும், இயற்கையை விரும்புவார்கள். இவர்களை நேசிப்போரை நேசிப்பார்கள். எச்சூழலிலும் நற்குணத்தை கொண்டவராக இருப்பார்கள். ரகசிய வாழ்க்கையை யோசிக்கமாட்டார்கள். உணர்ச்சியை தரக்கூடிய ராசியினரில் மீனராசிக்காரர்கள் உருத்தானவர்கள். தனது ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். இவர்களுக்கு கன்னி ராசியினரோடு திருமணம் நடைபெற வாய்ப்புகள் உண்டு.