#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல கிரிக்கெட் வீரரின் ஒவ்வொரு சதத்திற்கும் ஒரு பீர் பாட்டில் பரிசு!. மொத்தம் எத்தனை பீர்கள் தெரியுமா?
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே, லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் டெஸ்டில் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கிற்கு 33 பீர் பாட்டில்கள் பரிசாக அளித்துள்ளனர்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை ஆடிவந்தது. இதில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கடைசி டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஓய்வு பெறுகிறார். இவர் இந்த தொடர்களில் சிறப்பாக ஆடிவந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 71 ஓட்டங்கள் எடுத்த குக், 2வது இன்னிங்ஸில் 147 ஓட்டங்கள் எடுத்தார். அவர் அடித்த அந்த கடைசி சதம் அவருக்கு 33வது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
இதனையடுத்து ஆட்டத்திலிருந்து ஓய்வு பெரும் நிலையில், நேற்று குக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது 33 சதங்களை நினைவுகூறும் வகையில் அவருக்கு 33 பீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.