இந்திய ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்க ஏ.ஆர் ரஹ்மான் செய்த அசத்தலான காரியம்! வைரலாகும் வீடியோ! குவியும் பாராட்டுக்கள்!!



ar rahman compose song to cheer up the indian olympic players

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் இந்த மாதம் 23ஆம் தேதி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாடகி அனன்யா பிர்லா ஆகியோர் இணைந்து ஹிந்துஸ்தானி வே என்ற பாடலை உருவாக்கினர். இந்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த பாடலை நேற்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் ஏ ஆர் ரகுமான்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.