போட்டிக்கு நடுவே தமிழில் பேசிய அஸ்வின்.! விஹாரிக்கு எப்படி தமிழ் புரியும்.? இது தான் காரணமாம்.!



aswin-talking-with-vihari-in-tamil

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின்போது தமிழக வீரர் அஸ்வின் சக வீரர் ஹனுமா விஹாரியிடம் தமிழில் பேசிய வீடியோ வைரலானது.

இந்த போட்டியை இந்தியா டிரா செய்தது. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என்ற வெற்றி கண்ககில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.

3வது டெஸ்டில் விஹாரி-அஸ்வின் ஜோடி கடைசி வரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதறவிட்டனர். , இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து எப்படியும் இந்த போட்டியில் தோல்வி அடைந்துவிடும் என கூறப்பட்டநிலையில், அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரியின் கூட்டு முயற்சியால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

போட்டியின் போது விக்கெட் இழக்கக் கூடாது என திட்டத்துடன் விளையாடிய அஸ்வின், விஹாரியிடம் தமிழில் பேசி அவரை ஊக்குவித்துகொண்டே இருந்தார். பத்து பத்து பால் ஆடினா 40 கீழ வந்துடலாம், விளையாடு என விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. 

அஸ்வின் விஹாரியிடம் தமிழில் பேசிய வீடியோ வைரலான நிலையில், விஹாரிக்கு எப்படி தமிழ் புரியும் என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. அவர் சென்னை குரு நானக் கல்லூரியில் படித்ததால் விஹாரிக்கு நன்றாக தமிழ் தெரியும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.