தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சுழற்பந்துவீச்சாளரை ஒதுக்கி, சுழற்பந்திலேயே மடிந்த இந்திய அணி! படுதோல்வியை தழுவியது இந்தியா
பெர்த்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தபோதிலும் கேப்டன் கோலி வெறும் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அவருடைய இந்த முடிவிற்கு கிடைத்த மோசமான அனுபவமாக இது இந்த போட்டி அமைந்துவிட்டது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அற்புத சதத்தின் உதவியால், 283 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் 243 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகம்மது சமி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று 2-வது இன்னிங்க்ஸை துவங்கியது. இந்த இன்னிங்சில் முதல் ஓவரிலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து நான்காவது ஓவரில் புஜாரா நான்கு 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் கோலி மற்றும் முரளி விஜய் 17 மற்றும் 20 ரன்கள் எடுத்து நாதன் லயனின் சூழலில் சிக்கினர்.
அதைத் தொடர்ந்து ரகானே 30 ரன்களில் ஆட்டமிழக்க, 4 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணிக்கு வெற்றிப்பெற இன்னும் 175 ரன்கள் தேவை என்ற நிலையில் விஹாரி 24 ரன்களுடனும், ரிஷாப் பன்ட் 9 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இன்றைய ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக சரிய துவங்கின. ஹனுமா விஹாரி 28 ரங்களிலும், ரிஷப் பண்ட் 30 ரன்களிலும், உமேஷ் யாதவ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக இந்திய அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் இன்னிங்சில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தவறிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த பாடமாக அமைந்துவிட்டது.