யார் டாஸ் வென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை.! இதுதான் எங்களுடைய பலம்.! தில்லாக பேசிய பயிற்சியாளர்.!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தநிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இறுதிப்போட்டியில் டாஸ் பற்றி கவலைப்படாமல் அச்சமின்றி விளையாடுவோம்.
இறுதிப் போட்டியில் டாஸ் போன்ற காரணங்களை பொருட்படுத்தாமல் வெற்றி பெறும் மனநிலையுடன் ஆஸ்திரேலியா அணி தயாராக உள்ளது. முதலில் பேட்டிங் செய்தாலும் சரி அல்லது முதலில் பந்துவீசினாலும் சரி, எந்த சூழ்நிலையிலிருந்தும் வெல்ல முடியும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது. நியூசிலாந்து அணி உண்மையிலேயே நல்ல அணி. அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.