மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 ஓவர்களில் 82/5; தடுமாறும் ஆஸ்திரேலியா: தொடக்கம் முதலே மரண பயம் காட்டிய நியூசிலாந்து..!
எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரிலேயாவில் நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று சூப்பர்12 சுற்று இன்று தொடங்கியது. சூப்பர்12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த்து. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக டெவன் கான்வே -பின் ஆலன் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பின் ஆலன் ஆஸ்திரேலிய'அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரி,சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக பேட்டிங்க் செய்த பின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார் மறுமுனையில் அதிரடியாக பேட்டை சுழற்றிய டெவன் கான்வே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மறுமுனையில் கேன் வில்லியம்சன் 23, கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கான்வே தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்தார். அடுத்துவந்த ஜிம்மி நீஷம் இறுதி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது .கான்வே 92 ரன்கள் மற்றும் ஜிம்மி நீஷம் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 201 ரன்கள் இலக்க துரத்திய ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரங்களுடன் தடுமாறி வருகிறது.