ஆண்டவரின் பர்த்டே ட்ரீட்.. வெறித்தனமாக வெளிவந்த தக் லைஃப் டீசர்.! அட ரிலீஸ் எப்போ தெரியுமா??
டி20 உலகக் கோப்பை கனவில் நூலிழையில் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி.! யாரு வெளியேறப் போகிறது..?
டி20 உலகக் கோப்பைப் போட்டியை இருமுறை வென்ற ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் . இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
இதனையடுத்து ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடையும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிடும் என்பதால் வெற்றிப்பெறும் முனைப்போடு இரு அணிகளும் களமிறங்கின. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் அணியிடம் தோல்வியடைந்தது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வியடைந்த வங்க தேச அணியின் டி20 உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தள்ளது. தனது முதல் வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. குரூப் 1 புள்ளிப்பட்டியலில், இங்கிலாந்து அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 2 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், வங்க தேச அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசியிடத்தில் உள்ளது.