தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்திய அணியின் எதிர்காலம் இவர்தான்; அவரை உடனே அணியில் சேருங்கள் - பிராட் ஹாக்
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியுற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர், சுபம் கில் இருவருமே சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக நிச்சயம் செயல்படுவார்கள் என ஆஸ்திலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வரும் சுபம் கில் 2018-19ல் அதிகபட்சமாக 1442 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 1278 ரன்களும் எடுத்துள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 இன்னிங்சில் கில் 218 ரன்கள் எடுத்துள்ளார்.
அதே சமயம் மனிஷ் பாண்டேவின் எதிர்காலம் கேள்வி குறியாக தான் உள்ளது. தற்போதைய தொடர் தான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும். 2016 ஆம் ஆண்டில் ஒரு சதம் அடித்ததை தவிர அவரால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
ஆனால் சுபம் கில்லை பொருத்தவரை இந்த ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான 2 போட்டிகளில் 9, 7 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தற்போதைய முதல்தர தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் கூட இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
எனவே 19 வயதேயான சுபம் கில் இந்திய அணிக்கு ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்வார். குற்ப்பாக இந்திய அணியில் காலியாக உள்ள 4 ஆவது பேட்ஸ்மேனாக களமிறக்க இவர் தகுதியானவர். இவரை உடனே இந்திய அணியில் சேருங்கள் என பிராட் ஹாக் கூறியுள்ளார்.
Shubman Gill, another double century to his name overnight. Has to be a late inclusion in the One Day squad with India looking to solidify their middle order. Get the junior in. #INDvWI #WIvIND
— Brad Hogg (@Brad_Hogg) August 9, 2019