#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போட்டி முடிந்த கையுடன் மைதானத்தில் காதலை சொன்ன CSK வீரர்.! வைரல் வீடியோ.!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாகர் தனது காதலி ஜெயா பரத்வாஜுக்கு முன்னால் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது தோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தீபக் சாஹரின் வருங்கால மனைவி ஜெயா பரத்வாஜ், முன்னாள் ஹிந்தி பிக் பாஸ்-5 போட்டியாளரும் நடிகருமான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார். ஜெயா பரத்வாஜ் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார். டெல்லியைச் சேர்ந்த அவர் தற்போது ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.