நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
முகமது சிராஜ் மீது பந்தை எறிந்த பார்வையாளர்கள்.! கடுப்பான கோலி.! சிராஜை குறிவைக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்.!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் கடந்த போட்டியில் அவர் மீது ரசிகர்கள் பாட்டில் கார்க்குகளை வீசி அவமரியாதை செய்தனர்.
அதே போல நேற்று லீட்ஸ் மைதானத்திலும் தரக்குறைவான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது பவுண்டரி அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ் மீது பார்வையாளர்கள் சிலர் பந்தை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கூறுகையில், சிராஜ் மீது ரசிகர்கள் பந்தை தூக்கி எறிந்தனர். அது கோலிக்கு ஏமாற்றத்தை அளித்தது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் கத்தலாம், வீரர்களை நோக்கி எது வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் கண்டதையும் கொண்டு எறியக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார். சிராஜ் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவனத்துக்கு பிசிசிஐ கொண்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.