மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலியின் தவறுகளை சரிசெய்ய வெறும் 20 நிமிடம் போதும் - கவாஸ்கர் அறிவுரை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி மீண்டும் எப்போது பழைய பார்மிற்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.
2019ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த மூன்று வருடங்களாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும் அவர் ஒரே மாதிரியான பந்திற்கு ஆட்டம் இழப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த தவறினை அவர் எப்போது சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தன்னிடம் விராட் கோலி 20 நிமிடம் பேசினால் போதும் அவர் அந்த மாதிரியான பந்துகளில் ஆட்டமிழக்காமல் இருக்க தேவையான யோசனைகளை என்னால் வழங்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலியை போன்ற பல நட்சத்திர வீரர்களுக்கும் இதேபோன்ற சறுக்கல்கள் இருந்துள்ளன.
சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை புரிந்த விராட் கோலிக்கு ஒரு சில தோல்விகள் இருக்கத்தான் செய்யும். அவரால் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைவரும் பொறுமையாக காத்திருப்போம் எனவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.