வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
ஆட்டம் கைவிடப்பட்டால் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு எந்த இடம் கிடைக்கும்?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 18 ஆவது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காம் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதனால் ஆட்டம் நடைபெறுவது சந்தேகம் போல் தான் தெரிகிறது.
இந்திய நேரப்படி சரியாக 6 மணிக்கெல்லாம் நாட்டிங்காமில் அதிகமாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. இன்று இதுவரை பெய்த மழையிலேயே இப்போதுதான் கன மழை பெய்து வருகிறது. இதனால் இனிமேல் ஆட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான். இருந்தாலும் இந்திய நேரப்படி 8:45க்கு ஆட்டம் துவங்கினால் 20 ஓவர்கள் ஆட்டத்தினை நடத்த முடியும்.
டக் ஒர்த் லூயிஸ் விதி முறையின்படி ஒரு ஆட்டத்தில் முடிவினை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தது 20 ஓவர்கள் ஆடி இருக்க வேண்டும். அப்படி ஆட முடியாவிட்டால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக கருதப்படும். எனவே இந்திய நேரப்படி 8:45க்குள் ஆட்டம் தூங்காவிட்டால் இந்த ஆட்டம் முற்றிலும் கைவிடப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அப்படி கைவிடப்பட்டால் புள்ளிபட்டியலில் என்ன மாற்றம் நிகழும், இந்திய அணிக்கு எந்த இடம் கிடைக்கும் என்பதனை பாப்போம்.
இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஒருவேளை இந்த போட்டி முற்றிலும் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலே இருக்கும். ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை 5 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்தில் அப்படியே இருக்கும்.