மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணி அபார பந்துவீச்சு; ஒரே நாளில் சுருண்ட இங்கிலாந்து !!
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. ஆட்டத்தின் முதல் நாளிலே இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இந்திய வீரர்கள் இசாந்த் சர்மாவும், பும்ராவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தொடக்கத்திலிருந்தே மிரட்டினார்கள்.
பும்ரா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் பந்தை கால்காப்பில் வாங்கி நடுவரால் தவிர்க்கவே முடியாத அளவுக்கு ஸ்டெம்புகளை மறைத்து ஜென்னிங்ஸ் பந்தைத் தடுத்ததால் யோசிக்காமல் நடுவர் ‘அவுட்’ அளித்தார். இதனால், 3-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. ஜென்னிங்ஸ் ‘டக்அவுட்’டில் நடையைக் கட்டினார்.
அடுத்து கேப்டன் ஜோட் ரூட் களமிறங்கி, குக்குடன் சேர்ந்தார். இசாந்த், பும்ராவின் பந்து துல்லியமாகவும், வேகமாகவும் வந்ததால், அதைத் தொடுவதற்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அஞ்சினார்கள். களத்தில் நிற்கவைத்து, இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் படம் காட்டினார்கள்.
பும்ரா வீசிய 6-வது ஓவரில் குக் முதல் பவுண்டரி அடித்தார். ஆனால், இசாந்த் சர்மா வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் ஜோட் ரூட் (4) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த பேர்ஸ்டோ, குக்குடன் இணைந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் நிதானமாக பேட் செய்தனர். ஆனால், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்திய இசாந்த் சர்மாவும், பும்ராவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். ரன் அடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள்.
10 ஓவரில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. பும்ரா வீசிய 13-வது ஓவரில் பேர்ஸ்டோ தடுத்து ஆட முற்பட அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் கைகளில் தஞ்சமடைந்தது. பேர்ஸ்டோ 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகப்பெரிய விக்கெட்டான பேர்ஸ்டோவை பும்ரா கழற்றினார்.
அடுத்து ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி பந்துவீச அழைக்கப்பட்டனர். இருவரின் வேகப்ப்ந்து வீச்சையும் சமாளித்து ஆடுவதற்கு குக்கும், ஸ்டோக்ஸும் திணறினார்கள், இதனால், ஸ்கோர் உயரவே இல்லை. ஹர்திக் பாண்டியா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் குக் அடித்த பந்து 3-வது ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலியிடம் தஞ்சமடைந்தது. இதனால், குக் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 76.4 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சாம் குர்ரான் மட்டும் 78 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் பும்ராஹ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சமி, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளும், பாண்டிய ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன் பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்துள்ளது. தவான் 3 ரன்களிலும், ராகுல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.