தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மீண்டும் தடுமாற்றம்.. முதல் நாளிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்தியா!
இன்று ஓவல் மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 63 ஓவர்களிலே அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இன்று துவங்கிய இரண்டாது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா அணியில் கடந்த போட்டியில் ஆடிய இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.
பிரிதிவி ஷாவுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங் அகர்வால் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா சற்று நிலைத்து நிறு ஆடினார். அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து பிரிதிவி ஷா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து ரஹானே 7 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா அணி 113 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பின்னர் வந்த ஹனுமா விஹாரி புஜாராவுடன் சேர்ந்து நிதானமாக ஆடி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து புஜாரா 54 , பந்த் 12 , உமேஷ் 0 , ஜடேஜா 9 , சமி 16 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 63 ஓவர்களிலே அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளனர். டாம் பிளுண்டேல் மற்றும் டாம் லதாம் தலா 25 எடுத்து ஆடி வருகின்றனர்.