நெருங்க முடியாத நிலையில் இந்திய அணி டிக்ளேர்! பண்ட், ஜடேஜா அபார ஆட்டம்



India declared for 622

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 632 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, பண்ட் 159, ஜடேஜா 81 ரன்கள் எடுத்தனர்.

இன்று சிட்னியில் துவங்கியது. அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் புதிய சாதனையை படைக்கும்.

4th test

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த முறை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ராகுல் மீண்டும் தனது வாய்ப்பை தவறவிட்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மயங் அகர்வால் சிறப்பான துவக்கத்தை அளித்தார். புஜாராவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய அகர்வால் அரைசதமடித்து 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் 7 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களை விளாசினார். 

4th test

அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலி 23 ரன்னிலும், ரஹானே 18 ரன்னிலும் ஆவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினர். ஆனால் நிதானமாக தனக்குறிய பாணியில் ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் இவர் அடித்த மூன்றாவது சதமாகும். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 130, ஹனுமா விகாரி 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

4th test

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே விகாரி 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பண்ட் புஜாராவுடன் சேர்ந்து தனது சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நங்கூரமாய் நின்று ஆடிவந்த புஜாரா இரட்டை சதம் அடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக லியான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து 193 ரன்னில் புஜாரா வெளியேறினார். 

4th test

பின்னர் பண்ட்டுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பண்ட் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார். ஜடேஜா 10ஆவது அரை சதத்தை கடந்தார். 

4th test

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. 7 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 200 ரன்களை கடந்தனர். அணியின் எண்ணிக்கை 600 ரன்களை தாண்டியது. பண்ட் 150 ரன்களை கடந்தார். கடைசியில் ஒருவழியாக லியான் பந்தில் ஜடேஜா 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பண்ட் 159 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அடித்த இரண்டாவது அதிகபட்சமாக ரன் இதுவாகும். 2004 ஆம் ஆண்டில் இதே சிட்னி மைதானத்தில் 705 ரன்கள் எடுத்தது தான் அதிகம்.