ஆரம்பமே அமர்க்களம்: உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி!



india got first place in test championship points table

ஒருநாள் மற்றும் T20 உலகக்கோப்பை தொடர்களை போன்று இல்லாமல் வித்தியாசமான முறையில் தற்போது டெஸ்ட் உலகக்கோப்பை தொடர் துவங்கியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க 9 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதுவரை பங்கேற்றுள்ள 6 அணிகளில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

இந்த உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் தொடரில் கலந்து கொள்ளும் ஒன்பது அணிகளும் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளன. அதில் 3 சொந்த மண்ணிலும் மற்ற 3 டெஸ்ட் தொடர்கள் அயல்நாட்டிலும் நடைபெறும். ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இரண்டு முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

test championship

அனைத்து தொடரிலும் ஒரே அளவிலான போட்டிகள் நடைபெறப் போவதில்லை. ஆனால் ஒரு டெஸ்ட் தொடருக்கு 120 புள்ளிகள் மொத்தம் ஒதுக்கப்படுகிறது. அதில் எத்தனை டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் புள்ளிகள் ஒதுக்கப்படும். ஆட்டம் டிராவில் முடிந்தால் மூன்றில் இரண்டு பங்கு புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். 

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் தொடர் மூலம் விளையாடின. இந்த தொடரில் இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றும் ஒரு போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளும் தலா 32 புள்ளிகளை பெற்றுள்ளன. அடுத்ததாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி 60 புள்ளிகளை பெற்று தற்போதைய புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

test championship

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 60 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் எந்த இரு அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறதோ அந்த அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2021 ஜூன் மாதம் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும்.