சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
கடைசி டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம்; மீண்டும் சதம் விளாசிய புஜாரா!
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது. அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் புதிய சாதனையை படைக்கும்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த முறை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ராகுல் மீண்டும் தனது வாய்ப்பை தவறவிட்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மயங் அகர்வால் சிறப்பான துவக்கத்தை அளித்தார். புஜாராவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய அகர்வால் அரைசதமடித்து 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் 7 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களை விளாசினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலி 23 ரன்னிலும், ரஹானே 18 ரன்னிலும் ஆவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினர். ஆனால் நிதானமாக தனக்குறிய பாணியில் ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் இவர் அடித்த மூன்றாவது சதமாகும்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130, ஹனுமா விகாரி 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.